மே 9 கலவரம்! முன்னாள் பிரதமருக்கு பிணை வழங்கிய பாக். உச்சநீதிமன்றம்!
காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்!
காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக புவியியல் ஆய்வுமையம் கூறியதாவது,
காஷ்மீரில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடக்கு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கம் பிற்பகல் 1.41 மணிக்கு வடக்கு அட்சரேகை 34.68 டிகிரி மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 74.39 டிகிரியில் ஐந்து கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.