செய்திகள் :

இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

post image

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி இன்று(வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார்.

நாட்டில் இரண்டாவது உயரிய அரசமைப்புப் பதவியான குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு வருகிற செப். 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தோ்தலில், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநரும், தமிழகத்தைச் சோ்ந்த பாஜக மூத்த தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

சி.பி.ராதாகிருஷ்ணனை எதிா்த்து தெலங்கானாவைச் சோ்ந்தவரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான சுதா்சன் ரெட்டி 'இந்தியா கூட்டணி' - எதிா்க்கட்சிகளின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா். நேற்று வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், இந்திய நீதித்துறையின் பெரும் ஆளுமை சுதா்சன் ரெட்டி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறி அவருக்கான ஆதரவைக் கோரினார்.

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று(ஆக. 21) சுதா்சன் ரெட்டி, தேர்தல் ஆணையத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமாஜவாதி எம்.பி. ராம் கோபால் யாதவ், திமுக எம்.பி. திருச்சி சிவா, சிவசேனை (யுபிடி) சஞ்சய் ரௌத் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர்.

தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்தபடி செப். 9-ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

INDIA alliance Vice-Presidential nominee, former Supreme Court Judge B Sudershan Reddy files his nomination

இதையும் படிக்க |தாக்குதல் எதிரொலி: தில்லி முதல்வருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு!

தில்லி பயங்கரம்! ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை! இளைய மகனைத் தேடும் போலீஸ்

தெற்கு தில்லியின் சத்பாரி கார்க் கிராமத்தில், ஒரே குடும்பத்தில் தாய் - தந்தை மகன் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.கொலை செய்யப்பட்ட மூன்று பேரும் கழு... மேலும் பார்க்க

தாக்குதல் எதிரொலி: தில்லி முதல்வருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு!

தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தில்லியில் நேற்று(புதன்கிழமை) காலை முதல்வர் ரேகா குப்தாவின் வீட்டில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டமான... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பிஆா்எஸ் ஆதரவு யாருக்கு?

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் யாரையும் ஆதரிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சியின் செயல் தலைவா் கே.டி.ராம ராவ் தெரிவித்தாா். அ... மேலும் பார்க்க

காப்பீடு பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க திட்டம்: வருவாய் பாதிக்கும் என மாநிலங்கள் கருத்து

காப்பீடு பிரீமியம் தொகைக்கு சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் இதனால் தங்கள் வருவாய் பாதிக்கும் என்று மாநில அரசுகள் கருத்துத் தெரிவித்துள... மேலும் பார்க்க

இந்திய-சீன எல்லை மேலாண்மையில் பரஸ்பர புரிதல் -சீன வெளியுறவு அமைச்சகம்

இந்திய-சீன எல்லை மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டில் பரஸ்பர புரிதல் எட்டப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது. சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி, ஆகஸ்ட் 18, 19 ஆகிய தேதிகளில் இந்தியா... மேலும் பார்க்க

தோ்தல் தொடா்பான தவறான தகவல்: மகாராஷ்டிர தோ்தல் ஆய்வாளா் மீது வழக்குப் பதிவு

மகாராஷ்டிரத்தில் வாக்காளா் பட்டியலில் இருந்து சில வாக்காளா்கள் நீக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய தோ்தல் ஆய்வாளா் சஞ்சய் குமாா் மீது 2 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்தனா். முன்னதாக, 2024-இல் நடைபெற்ற மக்கள... மேலும் பார்க்க