செய்திகள் :

தவெக மாநாடு: வெயில், தாகம், நெரிசல் - தரை விரிப்பை கூடாரமாக்கிய தொண்டர்கள்!

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெறவுள்ளது. இதற்காக லட்சக்கணக்கில் தொண்டர்கள் மாநாட்டுத் திடலை நோக்கி வருகைதந்த வண்ணம் உள்ளனர்.

மாநாட்டில் வசதியான இடத்தில் அமருவதற்காக அதிகாலை முதலே தொண்டர்கள் வந்துள்ளனர். தொடக்கத்தில் முன் வரிசையில் இடம் பிடித்தவர்கள் வெயில் அதிகரிக்க அதிகரிக்க சிரமங்களை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் வெயிலை சமாளிக்க தரையில் விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தை கிழித்து அருகில் உள்ள கம்பி, கம்பு போன்ற நிலைகளில் கட்டி கூரையாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

மேலும் முன்னதாகவே ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டுவிட்டதால் தண்ணீர் விநியோகப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கூட்ட நெரிசல் மற்றும் வெயில் காரணமாக 10-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மயக்கமடைந்துள்ளதாக செய்திகள் வந்திருக்கின்றன. முன்னெச்சரிக்கையாக மருத்துவ குழுக்கள் பணியில் ஈடுபட்டுள்ளதனால் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டுள்ளன.

மாநாடு மாலை 4 மணியளவில் தொடங்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. தொண்டர்கள் வருகை காரணமாக சற்று முன்னதாகவே மாநாடு தொடங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தவெக: இன்று மதுரையில் இரண்டாவது மாநில மாநாடு - தயார் நிலையில் ஏற்பாடுகள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் உள்ள பாரபத்தியில் நடைபெறவுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டை விட பிரம்மாண்டமானதாக இருக்கும் எனக் கூறப... மேலும் பார்க்க

அமெரிக்காவில் எரிபொருள் நிரப்ப ரொக்கமாக ரூ.2 கோடி கொடுத்த புதின் - என்ன காரணம்?

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த அலாஸ்காவுக்கு பயணம் செய்தார். அங்கிருந்து திரும்புவதற்கு விமானத்தில் எரிபொருள் நிரப்ப, ரஷ்ய அரசு 2... மேலும் பார்க்க

குடைச்சல் தரும் CM-கள், Amit shah செக்! `பதவி பறிப்பு மசோதா' Plus & Minus! |Elangovan Explains

கடும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் பிரதமரோ, முதலமைச்சரோ, மந்திரிகளோ, 30 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்தால், 31-வது நாள் அவர்களின் பதவியை பறிக்கலாம் என்கிற புதிய பதவி பறிப்பு மசோதாவை தாக்கல் செய்துள்... மேலும் பார்க்க