செய்திகள் :

தவெக மாநாடு! இரும்புக் கம்பிகளுக்கு கிரீஸ் தடவுவதை ஆச்சரியத்துடன் பார்க்கும் தொண்டர்கள்

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் இன்று நடைபெறவிருக்கும் நிலையில், மாநாட்டுத் திடலில் இருக்கும் இரும்புக் கம்பிகளுக்கு க்ரீஸ் தடவப்பட்டு வருவதை தொண்டர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

மாநாடு நடைபெறும் திடலில், பிரமாண்ட மேடை, நடந்து வந்து விஜய் தொண்டா்களை சந்திக்கும் வகையில் நீண்ட நடைமேடை, தொண்டா்கள் அமருவதற்கான நாற்காலிகள் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில், விஜய் மாநாட்டுக்குள் வரும்போது, தொண்டர்கள் இரும்பு வேலி மீது ஏறி உள்ளே குதித்து விடக் கூடாது என்பதால், முன்னெச்சரிக்கையாக, இரும்பு வேலிகளுக்கு க்ரீஸ் பூசும் பணி நடந்து வருகிறது.

பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், தவெக மாநாட்டுக்கு இளைஞர்கள் வந்துகொண்டிருப்பதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கடும் வெயில் காரணமாக, மாநாட்டு திடலில் போடப்பட்டிருந்த தரைவிரிப்புகளை பலரும் கைகளில் ஏந்தி கூரை போல பிடித்திருக்கிறார்கள். சில இளைஞர்கள் குழந்தைகளுடன் மாநாட்டுக்கு வந்திருப்பதால் குழந்தைகளும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

மிகப்பெரிய திடலில் கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் இடையிடையே இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் மாநாட்டுக்கு வந்துள்ளனர்.

தவெக மாநாடு இன்று காலை தொடங்கி, இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோா் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுவதால், சுமாா் 506 ஏக்கா் பரப்பளவில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், மேற்கூரை இல்லாததால், காலை முதலே மாநாட்டுக்கு வருகை தந்த இளைஞர்கள் பலரும் வெய்யில் காணமாக மயக்கமடைந்து வருவதாகவும் அவர்களுக்கு முதலுதவி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தவெக மாநாடு: 100 டிகிரி வெயில்; டிரோன்கள் மூலம் குடிநீர் விநியோகம்!

தவெக மாநாட்டுத் திடலில் கடும் வெய்யில் காரணமாக தொண்டர்கள் பலர் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் டிரோன்கள் மூலமாக குடிநீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநா... மேலும் பார்க்க

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்குத் தடையில்லை! - உயர்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவை சென்னை உயர்நீதி... மேலும் பார்க்க

தவெக மாநாட்டில் தொண்டர்கள் மயக்கம்!

தவெக மாநாட்டுத் திடலில் கூட்ட நெரிசல் மற்றும் வெயில் காரணமாக 10-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மயக்கமடைந்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநாடு மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடியாக உயர்வு! எவ்வளவு?

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. எனினும் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. ஒரு ... மேலும் பார்க்க

தவெக மாநாடு: பணியில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள்!

மதுரை தவெக மாநாட்டுத் திடலில் அவசர மருத்துவ உதவிக்காக 100-க்கும் மேற்பட்ட மருத்துவ செவிலியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநாடு மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்ச... மேலும் பார்க்க

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

பொதுவாக இன்றைய ஜனநாயகத்தில் இரண்டு கட்சிகள் ஆட்சிமுறை வலுவாக உள்ள நாடுகள் பல. மூன்றாவதாக ஒரு கட்சி, இரண்டில் ஒன்றை முறியடித்து வெற்றிபெறுவது முயல்கொம்புதான். மூன்றாவதாக கட்சி தொடங்குவோா் ஏற்கெனவே உள்... மேலும் பார்க்க