மதுரை எஸ்.ஆலங்குளம்: `வீட்டுக்கு வெளிய சாக்கடை இருக்கலாம்; வீடே சாக்கடையா இருந்த...
துல்கர் சல்மானுடன் நடிக்கும் ஷ்ருதி ஹாசன்!
துல்கர் சல்மானின் புதிய திரைப்படத்தில் நடிகை ஷ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளாராம்.
நடிகை ஷ்ருதி ஹாசன் 3 திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னணி பாடகியாக பலரிடமும் வரவேற்பைப் பெற்றவருக்கு முதல் படம் சரியான வாய்ப்புகளைக் கொடுக்கவில்லை என ஷ்ருதியே தெரிவித்துள்ளார்.
ஆனால், அப்படம் இன்றுவரை நல்ல காதல் திரைப்படங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்த ஷ்ருதி ஹாசன் சலார் படத்திலும் நாயகியாக கவனம் பெற்றார்.
தற்போது, இவர் நடிப்பில் வெளியான கூலி திரைப்படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், அடுத்ததாக நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ஆகாசம்லோ ஒக தாரா திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக ஷ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ஏ. ஆர். முருகதாஸ் சந்தர்ப்பவாதி! விளாசும் சல்மான் கான் ரசிகர்கள்!