திடீரென வைரலான சோனியா பாடல்! என்ன காரணம்?
நடிகர் நாகர்ஜூனாவின் சோனியா பாடலை ரசிகர்கள் அதிகம் கேட்டு வருகின்றனர்.
நடிகர் நாகர்ஜூனா கூலி திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நாகர்ஜூனா, சௌபின், ரச்சிதா ராம் கதாபாத்திரங்கள் பேசப்பட்டன.
முக்கியமாக, நாகர்ஜூனாவின் தோற்றமும் நடையும் ரசிகர்களைக் கவர்ந்தது. இடைவேளைக் காட்சியில் நடனமாடியும் அசத்தினார்.
இந்த நிலையில், கூலி திரைப்படத்தால் தமிழகத்தில் 2000-களில் பிறந்த பலரும் யார் இவர் எனத் தேடுகின்றனர்.
நாகர்ஜூனாவைத் தெரியாதா? 90’ஸ் கிட்ஸ்களின் ரட்சகன் ஆச்சே? என பதிவுகள் வெளியாக உடனடியாக பலரும் ரட்சகன் திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘சோனியா... சோனியா’ பாடலை மீண்டும் கேட்டு வருகின்றனர்.
இதனால், கடந்த சில நாள்களில் யூடியூபில் அப்பாடலின் பார்வைகள் அதிகரித்துள்ளன.
வைரமுத்து வரிகளில் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவான இப்பாடலை உதித் நாராயண், உன்னி கிருஷ்ணன், ஹரிணி ஆகியோர் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கூலிக்கு யு/ஏ சான்றிதழ் கோரிய வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?