தவெக மாநாடு: 100 டிகிரி வெயில்; டிரோன்கள் மூலம் குடிநீர் விநியோகம்!
எதிர்பாராத சூழ்நிலை... திருமணம் ஒத்தி வைக்கப்படுகிறது - பிக் பாஸ் ரித்விகா திடீர் அறிவிப்பு
வரும் 27ம் தேதி தனது திருமணம் நடைபெறும் என அறிவித்திருந்த நடிகை ரித்விகா தற்போது எதிர்பாராத காரணங்களால் அந்தத் திருமணம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

இயக்குநர் பாலாவின் பரதேசி மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரித்விகா. தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனவர் ‘மெட்ராஸ்’ படத்துக்காக ஃபிலிம்ஃபேர்’ விருதும் வாங்கினார்.
தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 2ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலும் வென்றார்.
இந்நிலையில் கடந்த மாதம் தனக்கும் வினோத் லட்சுமணன் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக அறிவித்தார், வினோத் திருச்சியைச் சேர்ந்தவர் எனவும் இந்த திருமணம் ரித்விகாவின் பெற்றோர் பார்த்து உறுதி செய்தது எனவும் அறிவித்தனர்.

நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்களையும் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இருவரும் தங்களுடைய முதல் எழுத்து பொறிக்கப்பட்ட மோதிரங்களை மாற்றிக் கொண்ட அந்த புகைப்படங்கள் வைரலானது நினைவிருக்கலாம்.
இந்தச் சூழலில் தற்போது ‘குடும்ப காரணங்கள் மற்றும் எதிர்பாராத சூழ்நிலை காரணமாக வருகிற 27ம் தேதி நடைபெறவிருந்த எனது திருமணம் ஒத்தி வைக்கப்படுகிறது, உங்கள் புரிதலுக்கு நன்றி’ என திருமண பத்திரிகை வைத்த நண்பர்களுக்கு அறிவித்திருக்கிறார்.