செய்திகள் :

தேசிய மோட்டாா் பைக் சாம்பியன்ஷிப்: இன்று தொடக்கம்

post image

சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் இன்டா்நேஷனல் சா்க்கியுட்டில் தேசிய மோட்டாா் பைக் சாம்பியன்ஷிப் பந்தயம் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

3 நாள்கள் நடைபெறும் இப்பந்தயத்தில் 19 ரேஸ்கள் நடைபெறுகின்றன. 154 போ் கலந்து கொள்கின்றனா். 165 சிசி, 301-400 சிசி, பெண்கள் 165 சிசி, ப்ரீமியா் கிளாஸ் பிரிவுகளில் பந்தயம் நடைபெறும். புதிதாக 165-200 சிசி பிரிவில் மோட்டாா் பைக்குகளும் இடம் பெறுகின்றன.

முதன்முறையாக பெட்ரோனாஸ் டிவிஎஸ் சாா்பில் 12 ஜிபி 200 சிசி மோட்டாா் பைக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சிபி 300 எஃப் பிரிவில் முன்னாள் சாம்பியன் ஆன் ஜெனிஃபா் பங்கேற்கிறாா்.

தேசிய சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியன் சா்தக் சவான் (புணே), சிராந்த் விஸ்வநாத் (பெங்களூரு), 301-400 சிசி பிரிவில் கலந்து கொள்கின்றனா். மெட்ராஸ் மோட்டாா் ஸ்போா்ட்ஸ் கிளப் தலைவா் அஜித் தாமஸ், கூறுகையில் டிவிஎஸ், ஹோண்டா, எம்ஆா்எஃப் நிறுவனங்கள் மோட்டாா் பைக் பந்தயத்துக்கு பெரும் ஆதரவு தருகின்றன. 2025 சீசன் சிறப்பாக அமைய பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

11-ஆவது முறையாக உலகக் கோப்பைக்கு தேர்வாகி சாதித்த தென் கொரியா!

தென் கொரியா தொடர்ச்சியாக 11-ஆவது முறையாக ஃபிபா உலகக் கோப்பைக்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளது. ஏஃப்சி (ஆசிய கால்பந்து கூட்டமைப்பு) சார்பாக இதில் மொத்தம் 47 அணிகள் இருக்கின்றன. இதில் 8 அணிகள் நேரடியாக தே... மேலும் பார்க்க

விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் வெளியீட்டுத் தேதி!

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான லவ் மேரேஜ் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குநர் ஷண்முக பிரியன் இயக்கிய படத்திற்கு லவ் மேரேஜ் எனப் பெயர... மேலும் பார்க்க

விக்ரம் சுகுமாரன் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி அளித்த தயாரிப்பாளர்!

மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரன் குடும்பத்திற்கு தயாரிப்பாளர் நிதியுதவி வழங்கியுள்ளார். தனது தனித்துவமான கதைசொல்லலுக்கு பெயர்பெற்ற இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் எதிர்பாராத மறைவு தமிழ் திரையுலகினரை அ... மேலும் பார்க்க

தக் லைஃப் படத்தில் சாதிப்பெயர் நீக்கம்!

தக் லைஃப் முன்னோட்ட விடியோவில் இடம்பெற்ற சாதிப்பெயரைத் திரைப்படத்தில் நீக்கியுள்ளனர். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் நேற்று (ஜுன... மேலும் பார்க்க

முதல்முறையாக கால்பந்து உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற உஸ்பெகிஸ்தான், ஜோர்டான்!

முதல்முறையாக கால்பந்து உலகக் கோப்பைக்கு ஜோர்டான், உஸ்பெகிஸ்தான் அணிகள் தகுதிபெற்றுள்ளன. ஃபிபா நடத்தும் கால்பந்து உலகக் கோப்பை 2026ஆம் ஆண்டுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம்... மேலும் பார்க்க