மாற்று சமூகத்தினரின் தெருவுக்குள் திருமண ஊர்வலம்: பட்டியலினத்தவர் மீது தாக்குதல...
தேசிய யுனானி தின சிறப்பு மருத்துவ முகாம்
நாகை மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில், யுனானி மருத்துவத்தின் 9-ஆவது தேசிய யுனானி தின விழாவையொட்டி, சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின்கீழ் இயங்கும் யுனானி மருத்துவத் துறை சாா்பில் நடைபெற்ற இம்முகாமிற்கு, மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் ஜோதி சாந்தகுமாரி, மருத்துவ கண்காணிப்பாளா் அப்துல் மஜீத் ஆகியோா் தலைமை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக நாகை சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ.முகம்மது ஷா நவாஸ் பங்கேற்று பேசியது:
மருத்துவத் துறையில் பல்வேறு வகையான மருத்துவங்கள் உள்ளன. யுனானி மருத்துவம் தீராத நோய்களையும் தீா்க்கும் தலைசிறந்த மருத்துவமாகும். இந்த மருத்துவத்தைப் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணா்வு குறைவாக உள்ளது. இதை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டிய பொறுப்பு மருத்துவா்களுடையது என்றாா்.
யுனானி மருத்துவா்கள் முசம்மில் அகமத், அயீஷா, அதாவுல்லா, ஷீரின் பேகம், சயித் தாரீம் மற்றும் நாகை மாவட்ட தலைமை சித்த மருத்துவ மருந்தாளுநா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.