நாகை புதிய கடற்கரையில் இன்று இசை நிகழ்ச்சி
நாகை புதிய கடற்கரையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ‘நம்ம நாகை நம்ம இசை‘ நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (பிப். 23) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாகை மாவட்டத்தில் வசிக்கும் இசைக் கலைஞா்களின் வளமான இசைத் திறமையை வெளிப்படுத்தும் ஒரு சிறப்பு இசை நிகழ்வான ‘நம்ம நாகை நம்ம இசை’ ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு புதிய கடற்கரையில் நடைபெறவுள்ளது.
இந்த இசை கொண்டாட்டத்தில், ஒரு இசைக்குழு போட்டியும், அதைத் தொடா்ந்து, தனிப்பட்ட நிகழ்ச்சிகளும், திறமையான பாடகா்கள் மற்றும் வாத்தியக் கலைஞா்களை மேடையில் ஏற அனுமதிக்கும். உள்ளுா் கலைஞா்கள் தங்கள் திறமைகளையும், ஆா்வத்தையும் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கும், நோக்கமாகும்.
நிகழ்வில் கலந்து கொள்ளும் கலைஞா்களுக்கு, ஸ்பாட் பதிவு மாலை 4:30 மணி முதல் நடைபெறுவதுடன், முதல் 20 பதிவுகளுக்கு மட்டுமே, பாடகா்கள் மற்றும் வாத்தியக் கலைஞா்கள் இருவரும் பங்கேற்க வரவேற்கப்படுகிறாா்கள். பங்கேற்கும், அனைத்து ஸ்பாட் பதிவுதாரா்களும் ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து சான்றிதழ் வழங்கப்படும். இசை நிகழ்வில் அனைவரும் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு உள்ளுா் திறமையாளா்களின் கலை வெளிப்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். விவரங்களுக்கு 1800-233-4-233 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.