BB Tamil 8 Grand Finale: `நட்பு, காதல், பிரிவு, பகை'; இந்த சீசனில் நடந்த ஹைலைட்ஸ...
தேயிலை ஏலத்தில் 80.20 சதவீதம் விற்பனை
நீலகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடந்த ஆன்லைன் தேயிலை ஏலத்தில் 80.20 சதவீத தேயிலைத் தூள்கள் விற்பனை ஆகியுள்ளதாக தேயிலை வா்தகா்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பொங்கலுக்குப் பின் நடந்த ஆன்லைன் தேயிலை ஏலத்தில் மொத்தம் 18 லட்சத்து 70ஆயிரத்து 323.89 கிலோ தேயிலை தூள்கள் விற்பனைக்கு வந்தன. உள் நாட்டுத் தேவை கணிசமாக இருந்ததால் 14 லட்சத்து 99 ஆயிரத்து 917.93 கிலோ தேயிலைகள் விற்பனை ஆயின. இது மொத்த விற்பனையில் 80.20 சதவீதமாகும். சராசரியாக ஒரு கிலோவுக்கு ரூ. 124.73 வரை விலை கிடைத்தது.
கடந்த வார ஏலத்தில் சராசரி விலையாக ரூ. 126.56 இருந்த நிலையில், இந்த வாரம் ரூ. 2 விலை குறைந்திருப்பதாக விவசாயிகள் கூறினா்.