தொகுப்பாளர் பிரியங்காவுக்கு மீண்டும் திருமணம்? வைரலாகும் விடியோ!
சின்ன திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு திருமணம் நடைபெற்றதாக விடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
ஏற்கெனவே திருமணம் நடைபெற்று விவாகரத்து பெற்ற பிரியங்கா, தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்த நிலையில், இன்று திடீரென திருமணம் செய்துகொண்டதாகத் தகவல்கள் பரவிவருகின்றன.
ஆனால், இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையோ அல்லது புகைப்படத்தையோ பிரியங்கா தரப்பில் இருந்து இதுவரை வெளியிடப்படவில்லை.