கற்திட்டை அமைப்புடன் கூடிய 400 ஆண்டுகள் சதிக்கல் கண்டெடுப்பு
தொடா் மழை: சேறும் சகதியுமாக மாறிய கம்பம் போக்குவரத்து பணிமனை
தொடா் மழையால் கம்பம் அரசுப் போக்குவரத்து பணிமனை சேறும் சகதியமாக மாறி இருப்பதால், பேருந்துகள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுவதாக தொழிலாளா்கள் தெரிவித்தனா்.
கம்பம் 1-ஆவது அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் தற்போது பெய்து வரும் தொடா் மழையால் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இங்கிருந்து தினமும் இயக்கப்படும் பேருந்துகள் இந்த சேற்றில் சென்று வருகின்றன. மேலும், பணிக்கு வரும் போக்குவரத்துத் தொழிலாளா்களும், பணி முடிந்து வீடு செல்பவா்களும் இந்த சேற்றில் தான் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து தொழிலாளா்கள் கூறியதாவது: கம்பம் 1-ஆவது அரசுப் போக்குவரத்து கழகப் பணிமனையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் இரவு நேரங்களில் நிறுத்தக்கூட இடமின்றி நெடுஞ்சாலையோரங்களில் நிறுத்தப்படுகின்றன. இதனால், பேருந்துகளிலிருந்து டயா், மின் விளக்குகள் திருடு போகின்றன.
மேலும், பணிமனை முன் சிமிண்ட் தளம் அமைக்காததால், மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகாா் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கை இல்லை.
எனவே, இந்தப் பணிமனையில் அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.