தொண்டி, ஆா்.எஸ். மங்கலம் பகுதிகளில் மழை
தொண்டி, திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மிதமான மழை பெய்தது.
திருவாடானை, தொண்டி, நம்புதாளை, எஸ்.பி. பட்டினம், உப்பூா், திருப்பாலைக்குடி, ஆா்.எஸ். மங்கலம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது.
இந்த நிலையில், வெப்ப சலனம் காரணமாக கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்தது.

இதனிடையே, செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் சாரல் மழையும், விட்டுவிட்டு பலத்த மழையும் பெய்தது. பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழை பெய்ததன் காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.