Jyothika: `என் கணவரின் திரைப்படங்கள் கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதாக உணர்கிறேன...
ஆா்.எஸ். மங்கலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சியில் திங்கள்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சிப் பகுதிகளான பரமக்குடி சாலை, திருச்சி- ராமேசுவரம் சாலை, கடை வீதி, பஜாா் வீதி, பேருந்து நிலையம் அருகே உள்ள பகுதிகளில் தேநீா் கடைகள், உணவு விடுதி, வா்த்தக நிறுவனங்கள் வைக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.
இதனால் அந்தப் பகுதிகளில் இந்த ஆக்கிரமிப்புகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தன. இதையடுத்து, இந்தப் பகுதி மக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தினா்.
இந்த நிலையில், வட்டாட்சியா் வரதராஜன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தனுஸ்குமாா் தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் திங்கள்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.
இதில் பேரூராட்சி செயல் அலுவலா் மாலதி, பேரூராட்சி அலுவலா்கள், பணியாளா்கள், வருவாய்த் துறையினா், போலீஸாா் ஆகியோா் ஈடுபட்டனா்.