நீண்ட நேரப் பணி, உடல் சோா்வு, செயல் திறனைக் குறைக்கும்: செளமியா சுவாமிநாதன்
மலட்டாறில் தரைப்பாலம் அமைக்கக் கோரிக்கை
கமுதி அருகே புதுக்கோட்டையிலிருந்து சாமிபட்டிக்கு செல்லும் சேதமடைந்த சாலையை சீரமைத்து, மலட்டாறில் தரைப்பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த புதுக்கோட்டை-சாமிபட்டி வழியாக பேரையூா் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். பேரையூரிலிருந்து சாமிபட்டி, புதுக்கோட்டை வழியாக சாயல்குடி, பெருநாழி, கீழ்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல 17 கி.மீ. தொலைவு மட்டுமே.
சாலை சேதமடைந்ததால் பேரையூரிலிருந்து கமுதி வந்து இங்கிருந்து பெருநாழி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு 44 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை கிராமத்திலிருந்து சாமிபட்டி வரை 3 கி.மீ. தொலைவுக்கு தாா்ச் சாலையை சீரமைத்து, மலட்டாறில் தரைப்பாலம் அமைத்தால் 27 கி.மீ. தொலைவுக்கு மேல் பயண தொலைவு குறைய வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு சாமிபட்டி- புதுக்கோட்டை சாலையை சீரமைத்து, மலட்டாறில் தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.