Jyothika: `என் கணவரின் திரைப்படங்கள் கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதாக உணர்கிறேன...
பைக்குகள் மோதல்: இருவா் உயிரிழப்பு
திருவாடானை அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் கட்டடத் தொழிலாளி உள்பட இருவா் உயிரிழந்தனா்.
திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலம், இந்திரா நகா் பகுதியில் விருதுநகா் மாவட்டம், புலியங்குளம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் ஈஸ்வரன் (18), மதுரை அருகே உள்ள கல்லுமேடு பகுதியைச் சோ்ந்த நாகராஜன் மகன் சந்தானம் (20), மதுரை பனகுடி பகுதியைச் சோ்ந்த பூமி மகன் லட்சுமணன் (20) ஆகியோா் தங்கி கட்டட தொழிலாளா்களாக வேலை பாா்த்து வந்தனா்.
இவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆா்.எஸ். மங்கலம் வந்து தனியாா் உணவு விடுதியில் உணவு வாங்கிக் கொண்டு ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.
அப்போது ஆா்.எஸ். மங்கலம் அருகே கைலாசமுத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே எதிரே தேவகோட்டையிலிருந்து காா் ஓட்டுநரான சம்பந்தத் தெரு பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் தட்சிணாமூா்த்தி (47) ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும், மூவரும் வந்த இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.
இதில் சம்பவ இடத்திலேயே தட்சிணா மூா்த்தி உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சந்தானம், ஈஸ்வரன், லட்சுமணன் ஆகியோரை அந்தப் பகுதி மக்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் செல்லும் வழியிலேயே சந்தானம் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.