நீண்ட நேரப் பணி, உடல் சோா்வு, செயல் திறனைக் குறைக்கும்: செளமியா சுவாமிநாதன்
சாலையில் கிடந்த தங்கச் சங்கிலி காவல் நிலையத்தில் ஒப்படைப்பு: இருவருக்கு போலீஸாா் பாராட்டு
முதுகுளத்தூா் அருகே சாலையில் கிடந்த நான்கரைப் பவுன் தங்கச் சங்கிலியை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தவா்களை போலீஸாா் திங்கள்கிழமை பாராட்டினா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பெரிய உடப்பங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் செந்தில்குமாா் (46), அய்யனாா்(32). இவா்கள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் தொழில் செய்து வருகின்றனா்.
இவா்கள் முதுகுளத்தூரிலிருந்து கமுதிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த போது சாலையில் கிடந்த நான்கரைப் பவுன் தங்கச் சங்கிலியை கண்டெடுத்தனா்.
இதை முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகம், காவல் ஆய்வாளா் ஜான்சிராணி ஆகியோரிடம் அவா்கள் ஒப்படைத்தனா். இவா்கள் இருவரையும் போலீஸாா் பாராட்டினாா்.