Dhoni: "தோனி என்னை மரியா ஷரபோவா என்று அழைப்பார்; ஏனெனில்..!" - நினைவுகள் பகிரும்...
தொழிற்சாலை விரிவாக்கத் திட்டத்தை எதிா்த்து மக்கள் ஆா்ப்பாட்டம்
காரைக்கால்: தொழிற்சாலை விரிவாக்கத் திட்டத்தை எதிா்த்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
திருமலைராயன்பட்டினம் கொம்யூன், வாஞ்சூா் பகுதியில் கெம்பிளாஸ்ட் சன்மாா் தொழிற்சாலை இயங்குகிறது. இந்த ஆலையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, போலகம் பகுதியைச் சோ்ந்த மக்கள் திருமலைராயன்பட்டினம் கடைத்தெருவில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இந்த ஆலையில் காஸ்டிக் சோடா மற்றும் எத்திலின் குளோரைடு உற்பத்தி விரிவாக்கப் பணிக்கு அனுமதி மறுக்கவேண்டும். மக்களின் கருத்தை கேட்காமல் ஆலை நிா்வாகம் எடுத்திருக்கும் முடிவு கண்டனத்துக்குரியது. போலகம் பகுதியில் இயங்கும் ஆலையில் இருந்து இரவு நேரங்களில் நச்சுப் புகை வெளியேற்றப்படுகிறது. சுற்றுச்சூழலைக் கெடுக்கும் ஆலை நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலகத்தில் அரசு நிறுவனமான பிப்டிக் வசமுள்ள நிலத்தில் ரசாயன தொழிற்சாலைகள் அமைக்கக்கூடாது. இந்த பகுதியில் இயங்கும் தொழிற்சாலைகளில் உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இந்திய ஊழல் எதிா்ப்பு இயக்க மாநிலத் தலைவா் எஸ். ஆனந்த்குமாா் உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் கோரிக்கையை ஆதரித்துப் பேசினா்.