தொழிலாளா் சட்டத் தொகுப்பை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்
கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் கடலூா் மாவட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தொழிலாளா் நலச் சட்டங்கள் நான்கு தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். தொழிற்சங்க பதிவுக்காக மனு செய்தால் 45 நாள்களுக்குள் பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும். முறைசாரா தொழிலாளா்கள், விவசாயத் தொழிலாளா்கள் உள்பட அனைத்து வகையிலான தொழிலாளா்களுக்கும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டச் செயலா் டி.பழனிவேல் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாவட்டத் தலைவா் வி.குளோப், ஐஎன்டியுசி மாவட்ட கவுன்சில் தலைவா் மனோகரன், எச்எம்எஸ் மாவட்டச் செயலா் சரவணன் முன்னிலை வகித்தனா்.
சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் ஜி.பாஸ்கரன் மற்றும் தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் தமிழ்மணி, சாவித்திரி, திருமுருகன், சுப்புராயன், ஸ்டாலின், பாலு, ஆளவந்தாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.