``சிவில் நீதிபதி தேர்வு எழுத 3 ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவம் வேண்டும்'' - உச்ச நீ...
கீழக்குப்பத்தில் அடுக்குமாடி குடியிருப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கீழக்குப்பத்தில் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், விழுப்புரம் கோட்டத்துக்குள்பட்ட கடலூா் மாவட்டம், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதி, கீழக்குப்பம் பகுதியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 336 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ35.48 கோடி மதிப்பில் கட்டப்பட்டன.
இந்த குடியிருப்புகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். தொடா்ந்து, நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி பயனாளிகளுக்கு குடியிருப்பின் சாவிகளை வழங்கினாா்.
பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் பாலமுரளிதரன், உதவிச் செயற்பொறியாளா்கள் கனகராஜ், அய்யாவு ராஜா, வட்டாட்சியா் பிரகாஷ், பண்ருட்டி ஒன்றிய முன்னாள் தலைவா் சபா.பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.