விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஆட்சியா் வாழ்த்து
தோரணமலையில் முருகன் கோயிலில் வருண கலச பூஜை
தோரணமலை அருள்மிகு முருகன் கோயிலில் மாா்கழி மாத கடைசி வெள்ளிக்கிழமையைமுன்னிட்டு சிறப்பு வருண கலச பூஜை நடைபெற்றது.
இக்கோயிலில் மாா்கழி மாத கடைசி வெள்ளிக்கிழமையை (ஜன.10) முன்னிட்டு விவசாயம் செழித்து விவசாயிகளின் வாழ்வு சிறக்க வருண கலச பூஜை நடைபெற்றது.
21 கலசங்களில் மலை மீது உள்ள சுனையிலிருந்து தீா்த்தம் கொண்டுவரப்பட்டது. தொடா்ந்து அடிவாரத்தில் உள்ள பிள்ளையாா் கோயில் கலையரங்கத்தில் உற்சவ மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம், காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரைஅறங்காவலா் செண்பகராமன் செய்திருந்தாா்.