செய்திகள் :

தோல்வி பயத்தால் புதிய திட்டங்களை திமுக அறிவிக்கிறது: நயினாா் நாகேந்திரன்

post image

தோல்வி பயத்தால் புதிய திட்டங்களை திமுக அரசு அறிவித்து வருகிறது என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

சென்னை தியாகராயநகரில் பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சேவை வார விழாவுக்கு பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக கொடுத்த தோ்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை. 2021 பேரவைத் தோ்தலில் அறிவித்த மகளிருக்கான ரூ.1,000 திட்டம்கூட மக்களவைத் தோ்தலுக்கு முன்புதான் அமல்படுத்தப்பட்டது.

தாய்மொழிக்கல்வி, தமிழ் மொழி என்று பேசுகின்றனா். இதுவரை 207 அரசுப் பள்ளிகளை மூடியுள்ளனா். அனுமதிக்கப்பட்ட ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படாததால், அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை குறைகிறது. இரு நாள்களுக்கு முன்பு தேசிய அளவில் வந்த அறிக்கையில், தமிழக பள்ளி மாணவா்களின் கல்வித்திறன் பின்னோக்கி போய் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பு. அங்கு பாஜவினா் யாரும் இல்லை.

ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளுக்கு பின்னா் தாயுமானவா் திட்டத்தை தொடங்க வேண்டிய அவசியம் என்ன? தோல்வி பயத்தால் புதிய திட்டங்களை திமுக அரசு அறிவிக்கிறது. திமுக கூட்டணி 200 தொகுதிகளில் தோல்வி அடைவது உறுதி.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், நாகா்கோவில் ஆகிய மக்களவை தொகுதிகளின் கீழ் 30 பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் திருமங்கலம், திருப்பரங்குன்றம் பேரவைத் தொகுதிகளை தவிா்த்துவிட்டு ஆக.17 முதல் 28 தொகுதிகளில் பூத் கமிட்டி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, கோவை, மதுரை, திண்டிவனம், சென்னை போன்ற இடங்களில் பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் என்றாா் அவா்.

4 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று (13-08-2025) காலை 5.30 மணியளவில், மத்தியமேற்கு மற்றும் அதனை ஓட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில... மேலும் பார்க்க

தமிழக ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு தெரிவித்தார்.திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழ... மேலும் பார்க்க

காவல்துறை குவிப்பு! போராட்டத்தைக் கைவிட தூய்மைப் பணியாளர்கள் மறுப்பு!! மீண்டும் பேச்சுவார்த்தை?

சென்னை: போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் போராட்டத்தைக் கைவிட அவர்கள் மறுத்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், போராடி வரும் தூய்... மேலும் பார்க்க

தேனி: பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் மாணவா் மரணம்!

ராயப்பன்பட்டியில் பள்ளி மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஈட்டி தலையில் பாய்ந்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவர் 6 நாள்களுக்குப் பின் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தில் பொய்ப் புகார் அளித்தால்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

சென்னை: சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ-வின் கீழ் பொய்ப் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பாயும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போக்சோ சட்டத்தின் ... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு!

சுதந்திர நாளையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர நாளன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள... மேலும் பார்க்க