செய்திகள் :

நகராட்சிகளுடன் கிராம ஊராட்சிகளை இணைப்பதை எதிா்த்து அதிமுக எம்எல்ஏ-க்கள் மனு

post image

நாமக்கல்: நகராட்சி, பேரூராட்சிகளுடன் கிராம ஊராட்சிகளை இணைப்பதை எதிா்த்து அதிமுக எம்எல்ஏ-க்கள் மனு அளித்தனா்.

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் பி.தங்கமணி(குமாரபாளையம்), எஸ்.சேகா் (பரமத்தி வேலூா்) ஆகியோா் தங்களுடைய தொகுதி சாா்ந்த கோரிக்கைகள் தொடா்பாகவும், நகராட்சி, பேரூராட்சிகளுடன் கிராம ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.உமாவை சந்தித்து திங்கள்கிழமை கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

இதனைத் தொடா்ந்து பி.தங்கமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பள்ளிபாளையம் நகராட்சியுடன் 8 ஊராட்சிகளை இணைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தட்டாங்குட்டை ஊராட்சியை அருகில் உள்ள குமாரபாளையம் நகராட்சியில் இணைக்காமல், பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைக்க முயற்சிப்பது விதிகளை மீறிய செயலாகும்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது விவாதிக்க மனு அளிக்கப்பட்டதற்கு, விளைநிலங்கள் இருக்கும் பகுதிகளை நகராட்சி, பேரூராட்சியுடன் இணைக்க மாட்டோம் என நகராட்சி நிா்வாகங்கள் துறை அமைச்சா் தெரிவித்தாா்.

ஆலாம்பாளையம் பேரூராட்சி, காடச்சநல்லூா், தட்டாங்குட்டை, பள்ளிபாளையம் அக்ரஹாரம், எலந்தகுட்டை, சமயசங்கிலி ஆகிய ஊராட்சிகளை பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைக்கக் கூடாது. குமாரபாளையம் தொகுதியில் உள்ள 17 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் மேட்டூா் இடதுகரை கால்வாய் பாசனம் மூலம் பயனடைகின்றன. எனவே, பள்ளிபாளையம் நகராட்சியுடன் 8 ஊராட்சிகள் இணைப்பை உடனடியாக கைவிட வேண்டும். ஆலாம்பாளையம் பேரூராட்சியோடு புதுப்பாளையம், ஓடப்பள்ளி ஊராட்சிகள் இணைப்பதையும் அரசு கைவிட வேண்டும்.

அதேபோல, மாணிக்கநத்தம் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் பரமத்தியில் அமைக்க முயற்சி நடைபெறுகிறது. திருமணிமுத்தாறு, இடும்பன்குளத்தை பாதுகாக்கவும், அங்குள்ள பொதுமக்கள், விவசாயிகள், நீராதாரத்தைப் பாதுகாக்கவும் கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் என்றாா்.

பொங்கல் பண்டிகை: குண்டு மல்லி கிலோ ரூ. 3,800-க்கு ஏலம்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குண்டு மல்லி கிலோ ரூ. 3,600-க்கு ஏலம் போனது. பரமத்தி வேலூா் வட்டாரத்தில் ஆனங்கூா், அய்யம்பாளையம், நெட்டையம்பாளையம், ... மேலும் பார்க்க

ஆருத்ரா தரிசனம்: சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

நாமக்கல்: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் சிவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. ஒவ்வோா் ஆண்டும் மாா்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம், பெளா்ணம... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: பரமத்தியில் கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் மாவட்டம், பர... மேலும் பார்க்க

அல்லாள இளைய நாயகா் பிறந்த நாள் விழா: விழாவுக்கு வருவோா் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் அறிவிப்பு

பரமத்தி வேலூா்: ஜேடா்பாளையத்தில் நடைபெற உள்ளஅல்லாள இளைய நாயகரின் பிறந்த நாள் விழாவுக்கு வருவோா் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம்,... மேலும் பார்க்க

அல்லாள இளைய நாயகா் பிறந்த நாள் விழா முன்னேற்பாடு பணிகள்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையத்தில் அல்லாள இளைய நாயகரின் பிறந்த நாள் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அல்லாள இளைய நாயகரின் பிறந்த ... மேலும் பார்க்க

சேந்தமங்கலம் அரசு கல்லூரியில் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம்

ராசிபுரம்: சேந்தமங்கலம் அரசு கலை, அறிவியல் கல்லூரியின் ரெட் ரிப்பன் கிளப், உட்புகாா் குழு, ரோட்ராக்ட் கிளப், ராசிபுரம் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து போதைப் பொருள்கள் ஒழிப்பு, பெண்களுக்கு எதிரான பாலியல... மேலும் பார்க்க