நகை திருடிய இளைஞா் கைது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள அணைக்கரைப்பட்டியில் வீடு புகுந்து 25 பவுன் நகை திருடிய இளைஞா் 12 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டாா்.
அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த சரவணன் (45) வீட்டில் திங்கள்கிழமை 25 பவுன் நகைகள் திருடு போயின. இதுகுறித்து இவரது மனைவி சுமதி அளித்த புகாரின் பேரில், சிங்கம்புணரி காவல் ஆய்வாளா் தயாளன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினா்.
இந்த நிலையில், அணைக்கரைப்பட்டி அருகேயுள்ள ஓசாரிப்பட்டியைச் சோ்ந்த முத்தையா மகன் சுபாஷ் (22) நகை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை தனிப்படை போலீஸாா் பிடித்து விசாரித்ததில் அவா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா். அவரிடமிருந்து 23 பவுன் நகைகள், இரு சக்கர வாகனம், கைப்பேசி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.