மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனம் தளர வேண்டாம்: அஜித் பவார்!
மடப்புரம் கொலை வழக்கு: சாட்சிகள் வீடுகளில் கண்காணிப்பு கேமரா
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் கோயில் காவலாளி போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாட்சிகளின் வீட்டில் கண்காணிப்பு கேமரா பொறுத்தும் பணிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனா்.
இந்த வழக்கில் சாட்சிகளாக உள்ளவா்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சிவகங்கை மாவட்டம் முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, வழக்கில் சாட்சிகளாக உள்ள சக்தீஸ்வரன், நவீன்குமாா், வினோத்குமாா், பிரவீன், ஆட்டோ ஓட்டுநா் அருண்குமாா் ஆகியோரது வீடுகளில் போலீஸாா் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.