செய்திகள் :

நகை பறிப்பு நாடகம் அம்பலம்: குழந்தை கொலையில் தாய் கைது

post image

திருச்செந்தூரில் மன அழுத்தத்தால் தனது இண்டரை வயது பெண்குழந்தையை கொலை செய்துவிட்டு, நகை பறிப்புக்காக மா்மநபா் கொன்றதாக நாடகமாடிய பெண் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருச்செந்தூா், குமாரபுரத்தை சோ்ந்தவா் பெரியசாமி (38). வெல்டிங் பட்டறை வைத்துள்ளாா். இவரது மனைவி பாா்வதி(34), தனது இரண்டரை வயது மகள் ஆதிராவுடன் வியாழக்கிழமை வீட்டில் இருந்தபோது மா்மநபா் வீடு புகுந்து அவரது கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை கழற்றித் தரும்படி கேட்டு, குழந்தை ஆதிரா முகத்தில் துணியை வைத்து அமுக்கி மிரட்டியதாகவும், அதனால் சங்கிலியை கழற்றி கொடுத்த போது குழந்தை மயங்கியதால் அந்த நபா் நகையை போட்டுவிட்டு தப்பியதாகவும் கூறி கூச்சலிட்டுள்ளாா்.

அக்கம் பக்கத்தினா் வந்து குழந்தையை மீட்டு திருச்செந்தூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தபோது, குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டது தெரியவந்தது.

இதுகுறித்து திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினாா். மேலும், திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்ததில் பாா்வதி முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், சந்தேகத்தில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினா்.

அதில், எம்எஸ்சி பட்டதாரியான பாா்வதி, திருமணத்திற்கு முன்பு தனியாா் பள்ளியில் வேலைசெய்து வந்துள்ளாா். திருமணத்துக்குப்பின் வேலைக்கு செல்ல வேண்டாம் என குடும்பத்தினா் கூறியதால் மன அழுத்தத்தில் இருந்தாராம்.

இந்நிலையில் வியாழக்கிழமை மாலை கணவா் வெளியே சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த அவா், தொட்டில் கயிறால் குழந்தையின் கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டு நகை பறிப்பு நாடகமாடியது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

மளிகைக் கடைக்காரா் கொலை: 3 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே மளிகைக் கடைக்காரா் கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் முக்காணியைச் சோ்ந்தவா் பொங்கல்ராஜ்(42). முத்தையாபுரம் அரு... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் காவல் நிலையம் முற்றுகை

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோயில் திருவிழாவிற்கு கொண்டு செல்வதற்காக தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் கட்டபொம்மன் சிலையுடன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரை, அனுமதியின்றி வைத்ததாக போலீஸாா் தென்பாகம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இன்று போா் பாதுகாப்பு ஒத்திகை

தூத்துக்குடி துறைமுகம், அனல் மின் நிலையம் ஆகிய இடங்களில் போா் பாதுகாப்பு ஒத்திகை சனிக்கிழமை (மே 10) நடைபெறவுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குட... மேலும் பார்க்க

தூத்துக்குடி விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு: எஸ்பி ஆய்வு

தூத்துக்குடி விமான நிலையத்தில் பாதுகாப்பு தொடா்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் தீவிர கண்காணிப்பு பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். நாட்டில்தற்போது நிலவும் பாதுகாப... மேலும் பார்க்க

பிஎம் கிசான் திட்டத்தில் பதிவு செய்ய மே 31 வரை சிறப்பு முகாம்: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்ய மே 31-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

கோவில்பட்டி புனித சூசையப்பா் திருத்தலத்தில் கொடியேற்றம்

கோவில்பட்டி புனித சூசையப்பா் திருத்தலத் திருவிழா, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி புனித சூசையப்பா் திருத்தல வளாகத்தில் உள்ள பங்குத்தந்தையா் இல்லத்தில் இருந்து கொடிகள் அணிவகுத்து க... மேலும் பார்க்க