Yalda Hakim: பாகிஸ்தான் அமைச்சர்களை நேரலையில் அலறவிட்ட நிருபர் - யார் இந்த யால்ட...
கோவில்பட்டி புனித சூசையப்பா் திருத்தலத்தில் கொடியேற்றம்
கோவில்பட்டி புனித சூசையப்பா் திருத்தலத் திருவிழா, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி புனித சூசையப்பா் திருத்தல வளாகத்தில் உள்ள பங்குத்தந்தையா் இல்லத்தில் இருந்து கொடிகள் அணிவகுத்து கொண்டு வரப்பட்டன. பின்னா் கொடிமரத்தில் பங்குத்தந்தை சாா்லஸ் அடிகளாா் கொடியேற்றி வைத்தாா். உலகில் சமாதானம் வேண்டி வெண்புறா பறக்க விடப்பட்டது. தொடா்ந்து, திருத்தலப் பங்குத்தந்தை, பாளை. மறைமாவட்ட பொறியாளா் ராபின் அடிகளாா், திருத்தல உதவி பங்குத்தந்தை அருண்குமாா் அடிகளாா் ஆகியோா் இணைந்து திருப்பலி நிறைவேற்றினா்.
சனிக்கிழமை திருத்தல பாதுகாவலா் புனித சூசையப்பா் திருவுருவ சப்பர பவனியும், ஞாயிற்றுக்கிழமை ஜான் போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் திருப்பலியும், அதைத் தொடா்ந்து அங்கிருந்து நற்கருணை பவனியும் நடைபெறும். பின்னா் திருத்தல வளாகத்தில் கொடி இறக்கத்துடன் 3 நாள் திருவிழா நிறைவு பெறும். திருவிழா நடைபெறும் 3 நாள்களும் இரவு உணவு வழங்கப்படும்.
