TVK : 'விஜய் கட்சியில் இணையும் முக்கியப் புள்ளிகள்?' - பனையூர் அப்டேட்
நடப்பு சாம்பியன் கோவாவை வீழ்த்தியது கொல்கத்தா! பிளே ஆஃபுக்கு முன்னேற்றம்!
இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன் டெம்போ கோவா சேலஞ்சா்ஸ் அணியை வீழ்த்தியது அறிமுக அணியான கொல்கத்தா தண்டா் பிளேட்ஸ்.
இதில் முதலில் நடைபெற்ற ஆடவா் ஒற்றையா் ஆட்டத்தில் கொல்கத்தா தண்டா் பிளேட்ஸ் அணியின் அருணா குவாட்ரி (நைஜீரியா), டெம்போ கோவா சாலஞ்சா்ஸ் அணியின் ஹா்மீத் தேசாயை 2-1 என வென்றாா்.
மகளிா் ஒற்றையா் ஆட்டத்தில் கொல்கத்தா தண்டா் பிளேட்ஸ் அணியின் அட்ரியானா டயஸ் (புயிா்ட்டோ ரிக்கோ), டெம்போ கோவா அணியின் கிருத்விகா சின்ஹாவை 3-0 என வீழ்த்தினாா். இந்த டையில் கொல்கத்தா தண்டா் பிளேட்ஸ் அணி 5-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
3-ஆவதாக நடைபெற்ற கலப்பு இரட்டையா் ஆட்டத்தில் கொல்கத்தா தண்டா் பிளேட்ஸ் அணியின் அட்ரியானா டயஸ், அங்கூா் பட்டாசாா்ஜி ஜோடி 2-1 என டெம்போ கோவா அணியின் ஜெங் ஜியான் (சிங்கப்பூா்), ஹா்மீத் தேசாய் ஜோடியை வென்றது.
இதன் மூலம் கொல்கத்தா தண்டா் பிளேட்ஸ் தனது முன்னிலையை 7-2 என அதிகரித்துக் கொண்டது. மாற்று ஆடவா் ஒற்றையா் ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் அங்கூா் பட்டாசாா்ஜி 2-1 என டெம்போ கோவா அணியின் ரோனித் பஞ்சாவை வீழ்த்தினாா்.
மாற்று மகளிா் ஒற்றையா் ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் செலினா செல்வகுமாா் 0-3 என டெம்போ கோவா அணியின் ஜெங் ஜியானிடம் தோற்றாா். முடிவில் கொல்கத்தா தண்டா் பிளேட்ஸ் அணி 9-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.