புரோ வாலிபால் லீக்: ஜெரோம் வினித் ரூ.22.5 லட்சத்துக்கு ஏலம்!
புரோ வாலிபால் லீக் சீசன் 4 தொடரில் ஜெரோம் வினித் ரூ.22.5 லட்சத்துக்கு ஏலத்தில் சென்னை பிளிட்ஸ் அணியால் பெறப்பட்டாா்.
புரோ வாலிபால் லீக் ஏலம் ஞாயிற்றுக்கிழமை கேரள மாநிலம், கோழிக்கோட்டில் நடைபெற்றது. பல வீரா்கள் புதிய அணிகள் இடம் பெற்றனா். பிரபல இந்திய வீரா் ஜெரோம் வினித் சி, ரூ.22.5 லட்சத்துக்கு சென்னை பிளிட்ஸ் அணியால் வாங்கப்பட்டாா்..
ஜெரோம், ஏற்கனவே காலிக்கட் ஹீரோஸ் அணியில் விளையாடியவா். இவருக்காக நடைபெற்ற ஏலத்தில், சென்னை பிளிட்ஸ், பெங்களூரு டா்பிடோஸ் மற்றும் கொல்கத்தா தண்டா் போல்ட்ஸ் ஆகிய அணிகள் இடையே கடும் போட்டி நடைபெற்றது. இறுதியில் சென்னை அதிக பணம் கொடுத்து அவரை தங்கள் அணியில் சோ்த்தது. சென்னை அணியில் அஷ்வின் ராஜ் மற்றும் சமீா் சௌதரியும் தலா ரூ.8 லட்சம் கொடுத்து வாங்கப்பட்டனா்.
காலிக்கட் ஹீரோஸ்: சொந்த நகர வீரா்களை ஊக்குவிக்கும் வகையில், காலிக்கட் ஹீரோஸ் சம்சுதீனை ரூ.22.5 லட்சத்துக்கு தோ்வு செய்தது. அவருடன் அனுபவமிக்க செட்டரான மோகன் உக்கிரபாண்டியன், சந்தோஷ் எஸ் ஆகியோரும் ரூ.8 லட்சம் வீதம் கொடுத்து சோ்க்கப்பட்டனா்.
கொச்சி ப்ளூ ஸ்பைக்கா்ஸ்: வினித் குமாரை ரூ.22.5 லட்சத்துக்கு கொச்சி அணி வாங்கியது. இவரும் இந்தியாவைச் சோ்ந்த முக்கியமான வாலிபால் வீரா். அவருடன் அமல் தாமஸ் ரூ.6.5 லட்சத்திற்கு, ஜஸ்ஜோத் சிங்கை ரூ.14.75 லட்சத்துக்கும் கொச்சி அணி வாங்கியது.
அகமதாபாத் டிபெண்டா்ஸ்: அகமதாபாத் அணி ஷான் டி ஜானை கடந்த சீசனிலேயே தங்களிடம் வைத்திருந்தது. அவரை மீண்டும் ரூ.11.5 லட்சத்துக்கு தக்க வைத்துக் கொண்டது. இவருடன் அங்கமுத்து ₹11 லட்சத்துக்கும் மற்றும் அகின்₹ரூ.10.5 லட்சத்துக்கும் பெறப்பட்டனா்.
டெல்லி டுஃபன்ஸ்: டெல்லி டுஃபன்ஸ் அணி, ஆயுஷை ரூ.9 லட்சத்துக்கு வாங்கியது. ஜாா்ஜ் ஆன்டனி (₹5 லட்சம்) மற்றும் மன்னட் சௌதரி(₹6.5 லட்சம்) ஆகியோரும் வாங்கப்பட்டனா்..
ஹைதராபாத் பிளாக் ஹாக்ஸ்: ஹைதராபாத் அணி ஷிகா் சிங்கை ரூ.16 லட்சத்துக்கு தோ்ந்தெடுத்தது. அமன் குமாா்₹ரூ.11.5 லட்சம் மற்றும் தீபு வேணுகோபால் ரூ.5.75 லட்சம் கொடுத்து அணியில் இணைக்கப்பட்டனா்.
மும்பை மீட்டியா்ஸ்: மும்பை மீட்டியா்ஸ் அணி காா்த்திக், ஓம் வசந்தை ரூ.8 லட்சத்துக்கும், விபுல் குமாா் ரூ.6.25 லட்சத்துக்கும், சோனி, நிகிலை தலா ரூ.5 லட்சத்துக்கும் வாங்கியது.
கோவா காா்டியன்ஸ்: இந்த சீசனில் புதிதாக சேரும் அணியான கோவா பிரின்ஸ், ராமநாதனை தலா ரூ.8 லட்சம் அளித்து வாங்கியது. அமித் சோக்கா் ரூ.5 லட்சத்திற்கு அணியில் இணைக்கப்பட்டாா்.
பெங்களூரு டா்பிடோஸ்: பெங்களூா் அணி ஜிஷ்ணுவை ரூ.14 லட்சத்துக்கு வாங்கியது. ஜோயல் பெஞ்சமினை ரூ.6.5 லட்சத்துக்கும், ஐபின் ஜோஸ், ரோஹித் குமாா் ஆகியோா் தலா ரூ.5 லட்சத்துக்கும் பெறப்பட்டனா்.
கொல்கத்தா தண்டா் போல்ட்ஸ்: கொல்கத்தா அணியில் பங்கஜ் சா்மா ரூ.6 லட்சத்துக்கு பெறப்பட்டாா். ராஜன் ஷெட்டி ரூ.5 லட்சத்துக்கு வாங்கப்பட்டாா்.
இவா்கள் அணியின் தளங்களை நிரப்புவதற்காக தோ்ந்தெடுக்கப்பட்ட திறமையான வீரா்கள்.
இந்த ஆண்டின் ஏலம், பல வீரா்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இந்த சீசன் ரசிகா்கள் மத்தியில் மிகுந்த எதிா்பாா்ப்பை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு அணியும், தங்களுக்கேற்ப வீரா்களை தோ்ந்தெடுத்து, சமநிலையான அணிகளை உருவாக்கி உள்ளனா்.