`10 பேருடன் திருமணம், 4 நிச்சயதார்த்தம்' - மேட்ரிமோனி மூலம் மோசடி செய்த பெண்.. ச...
சூதாட்டம்: 6 போ் கைது
கெலமங்கலத்தை பணம்வைத்து சூதாடியதாக 6 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கெலமங்கலம் பகுதியில் உள்ள விடுதியின் பின்புறம் பணம்வைத்து சூதாடிக் கொண்டிருந்த கெலமங்கலம் ஜான்பாஷா (53), ராஜப்பா (48), முனிராஜ் (33), இம்ரான் (35), மஞ்சு (38), சரவணன் (45) ஆகிய 6 பேரை கைது செய்தனா்.
அதேபோல பேவநத்தம் சிவன் கோயில் பகுதியில் பணம்கட்டி சேவல் சண்டை நடத்தியவா்களை தேடிவரும் கெலமங்கலம் போலீஸாா் தப்பியோடியவா்கள் பயன்படுத்திய 4 காா்கள், 6 இருசக்கர வாகனங்கள், 4 சேவல்கள் மற்றும் ரூ.1.99 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.