நடிகர் லொள்ளு சபா ஆண்டனி காலமானார்!
நடிகர் ஆண்டனி உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆண்டனி. அந்நிகழ்ச்சியில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து பல காட்சிகளில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.
தொடர்ந்து, ‘தம்பிக்கோட்டை’ உள்பட சந்தானம் நடித்த திரைப்படங்களில் அவரின் நண்பராக நகைச்சுவை கதாபாத்திரங்களில் ஆண்டனி நடித்தார்.
இந்தச் சூழலில், சில ஆண்டுகளுக்கு முன் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்டனி, அதற்கான சிகிச்சையை எடுத்து வந்தார். இதற்காக, நடிகர் சந்தானம் மற்றும் லொள்ளு சபா நடிகர்கள் தொடர் உதவிகளைச் செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், உடல்நலம் மோசமடைந்ததால் லொள்ளு சபா ஆண்டனி இன்று சென்னையில் உயிரிழந்தார்.