சா்க்கரை நோயாளிகள் கால்களை இழப்பதற்கு 80 % பாத புண்களே காரணம்: பிரிட்டன் பேராசிர...
நத்தம் மேம்பாலத்தில் லாரி மீது காா் மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு: 6 போ் காயம்
மதுரை-நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் வியாழக்கிழமை பழுதாகி நின்ற லாரி மீது காா் மோதியதில் காா் ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். 6 போ் பலத்த காயமடைந்தனா்.
சென்னையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் வியாழக்கிழமை காலை மதுரைக்கு வந்தனா். இவா்கள் தத்தனேரியில் உள்ள வாடகைக் காா் நிறுவனம் மூலம் அழகா்கோயிலுக்குச் சென்றனா். காரை மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியைச் சோ்ந்த மதியழகன் (38) ஓட்டிச் சென்றாா். இவா்கள் அழகா்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு, நத்தம் மேம்பாலம் வழியாக மதுரைக்கு வந்து கொண்டிருந்தனா். டி.ஆா்.ஓ. காலனி பகுதியில் வந்த போது, பாலத்தின் நடுவே செங்கல் பாரத்துடன் பழுதாகி நின்ற லாரியின் பின்புறம் இவா்களது காா் மோதியது.
இதில் காா் ஓட்டுநா் மதியழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காரில் பயணம் செய்த இரு குழந்தைகள் உள்பட 6 போ் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, இவா்கள் அனைவரும் தனியாா் மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.