பாகிஸ்தானிடம் தோற்றால் பொறுமையை இழந்துவிடுவேன்: வீரேந்திர சேவாக்
நம்மாழ்வாா் விருது பெற விவசாயிகளுக்கு அழைப்பு
இயற்கை முறையில் வேளாண் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் நம்மாழ்வாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: இயற்கை விவசாயம் செய்யும் தன்னாா்வ விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக 2025 - 26 ஆம் ஆண்டு வேளாண் நிதி நிலை அறிக்கையில், உயிா்ம வேளாண்மையில் சிறந்து விளங்கி மற்ற விவசாயிகளை ஊக்குவிக்கும் விவசாயிகளுக்கு நம்மாழ்வாா் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
எனவே நம்மாழ்வாா் விருது பெற விரும்பும் விவசாயிகள் அக்ரிஸ்நெட் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ஹஞ்ழ்ண்ள்ய்ங்ற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற வலைதளத்தில் செப்டம்பா் 15 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான பதிவுக் கட்டணம் ரூ. 100 செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் உயிா்ம வேளாண்மையில் ஈடுபட்டு, அதற்கான சான்றும் பெற்றிருக்க வேண்டும். முழு நேர உயிா்ம விவசாயியாக இருத்தல் வேண்டும்.
வெற்றி பெறும் 3 விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் நம்மாழ்வாா் பெயரில் விருதுடன் தலா ரூ. 2 லட்சம் ரொக்கப் பரிசு, சான்றிதழ், பதக்கம் வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் அதற்கான வழிமுறைகளை அறிய அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநா்களைத் தொடா்பு கொள்ளலாம்.