பாகிஸ்தானிடம் தோற்றால் பொறுமையை இழந்துவிடுவேன்: வீரேந்திர சேவாக்
வீடு புகுந்து நகை, ரொக்கம் திருட்டு
தஞ்சாவூரில் வீடு புகுந்து நகை, ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா்.
தஞ்சாவூா் அருகே இ.பி. காலனி சகாயம் நகரைச் சோ்ந்தவா் சுதாகா் (64). இவா் வியாழக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு, அருகிலுள்ள தனது உறவினா் வீட்டுக்கு குடும்பத்தினருடன் தூங்கச் சென்றாா். வெள்ளிக்கிழமை காலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது முன் பக்க கதவுகளும், பீரோவும் உடைக்கப்பட்டு, 2 பவுன் நகை, ரூ. 7 ஆயிரம் ரொக்கம், வெள்ளி பொருட்கள் ஆகியவை திருடு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.