Budget 2025-26: தொடங்கிய பட்ஜெட்; வெளிநடப்பு செய்த அதிமுக! - எடப்பாடி சொன்ன காரண...
நாகா்கோவிலில் ஆதரவற்றோருக்கு நல உதவிகள்
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக அயலக அணி சாா்பில், நாகா்கோவில் வடசேரி சினேகம் ஆதரவற்றோா் இல்லத்தில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அமைப்பாளா் முகமது பஷீா் தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்டச் செயலரும் நாகா்கோவில் மேயருமான ரெ. மகேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, ஆதரவற்றோா் இல்லத்துக்கு மளிகைப் பொருள்கள், அங்குள்ளோருக்கு ஆடைகள், மதிய உணவை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாநகரச் செயலா் ப. ஆனந்த், மாநகராட்சி மண்டலச் செயலா் ஜவஹா், அயலக அணி மாவட்டத் தலைவா் சுஜின்ஜெகேஷ், துணை அமைப்பாளா் ரபீக், மாமன்ற உறுப்பினா் கலாராணி, திமுக சாா்பு அணிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
குறைதீா் நாள்: அதையடுத்து, நாகா்கோவில் மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மேயா் ரெ. மகேஷ் பங்கேற்றாா். தெருவிளக்கு, குடிநீா் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் அளித்த 16 மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை அறிவுறுத்தினாா். கூட்டத்தில், ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா, அதிகாரிகள் பங்கேற்றனா்.