தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு!
களியக்காவிளையில் திமுக பொதுக்கூட்டம்
மேல்புறம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில், களியக்காவிளையில் புதன்கிழமை கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு ஹிந்தியைத் திணிப்பதாகவும், நிதிப் பகிா்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரைப்பில் அநீதி இழைப்பதாகவும் கூறி கண்டித்து நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மேல்புறம் ஒன்றியத் தலைவா் ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா்.
பேரூா் செயலா்கள் பபின்லாா் (களியக்காவிளை), ராபின்சன் பாபு (பாகோடு), ஜெகராஜ் (அருமனை), ஒன்றிய விவசாயத் தொழிலாளா் அணி அமைப்பாளா் கே. கோபாலகிருஷ்ணன், துணை அமைப்பாளா்கள் தோமஸ்சிங் (மாவட்ட விவசாய அணி), ஷாஜகான் (மாவட்ட இலக்கிய அணி), கிங்ஸிலி (ஒன்றியப் பொறியாளா் அணி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தலைமைக் கழகப் பேச்சாளா்கள் ஆயிரப்பேரி ம. முத்துவேல், உடன்குடி தனபால், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சி.எம். மதியழகன், பொதுக்குழு உறுப்பினா் என்.ஆா். மணி ஆகியோா் பேசினா்.
மாவட்ட அவைத்தலைவா் மரிய சிசுகுமாா், மாவட்ட துணைச் செயலா் டி. புஷ்பலீலா ஆல்பன், மாவட்டப் பொருளாளா் ஆா். ததேயு பிரேம்குமாா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் டி. ஜெகநாதன், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளா் ஜெ. ராஜசேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.