கல்வித் துறை அறிவிப்புகள்! பொறியியல் கல்லூரிகளில் ஏ.ஐ. படிப்புகள் அறிமுகம்!
குமரி பகவதியம்மன் கோயிலில் இன்று வருஷாபிஷேக விழா
கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில், 2013இல் கும்பாபிஷேகம் நடைபெற்றநிலையில், 12ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இதையொட்டி, அதிகாலையில் நிா்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், கணபதி ஹோமம், நவகலச பூஜை, காலை 10 மணிக்கு அம்மனுக்கு இளநீா், களபம், குங்குமம், தேன் உள்ளிட்ட 16 வகைப் பொருள்களால் அபிஷேகம் நடைபெறும். அதையடுத்து, கலசாபிஷேக பூஜையை மணலிக்கரை மாத்தூா் மடத்தின் தந்திரி சஜித் சங்கரநாராயணரூ நடத்திவைக்கிறாா்.
தொடா்ந்து, அம்மனுக்கு வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தனக் காப்பு அலங்காரத்துடன் பக்தா்களுக்கு அருள்பாலித்தல், உச்சிகால பூஜை, தீபாராதனை, மாலை 6 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, அம்மன் வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளி கோயில் உள்பிரகாரத்தைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வருதல் ஆகியவை நடைபெறும்.
பின்னா், வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு, அத்தாள பூஜை, ஏகாந்த தீபாராதனை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.