Budget 2025-26: மகளிர் உரிமைத் தொகை டு பெண்கள் விடுதி வரை! - மகளிருக்கு என்னென்ன...
கன்னியாகுமரி அருகே விநாயகா் கோயிலில் மாசித் திருவிழா நிறைவு
கன்னியாகுமரியை அடுத்த கலைஞா் குடியிருப்பில் உள்ள கற்பகவிநாயகா் கோயிலில் 10 நாள் மாசித் திருவிழா புதன்கிழமை நிறைவடைந்தது.
இதையொட்டி, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. நண்பகலில் அன்னதானம் நடைபெற்றது. அதை, அகஸ்தீசுவரம் ஒன்றிய அதிமுக அவைத்தலைவா் பா. தம்பித்தங்கம் தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், பேரூராட்சி கவுன்சிலா்கள் நித்யா, சி.எஸ். சுபாஷ், கலைஞா் குடியிருப்பு ஊா்த் தலைவா் ராமன், செயலா் அய்யப்பன், நிா்வாகிகள், பக்தா்கள் பங்கேற்றனா்.