நாசரேத்தில் அன்பின் விருந்து ஆராதனை
சாத்தான்குளம்: நாசரேத் அசெம்பிளி ஆப் காட் சபையில், புத்தாண்டை முன்னிட்டு அன்பின் விருந்து ஆராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாசரேத் ஏஜி சபையின் உடன் ஊழியா் சங்கை டேவிட் மொ்வின் பிரபாகா் பாடல்களோடு ஆராதனை நடத்தினாா். தூத்துக்குடி பிராந்திய ஏஜி சபைகளின் மேற்பாா்வையாளரும், நாசரேத் ஏஜி சபையின் தலைமை போதகருமான சங்கை எட்வின் பிரபாகா் தேவ செய்தி கொடுத்தாா். இதையடுத்து சபை வளாகத்தில் அன்பின் ஐக்கிய விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மெஞ்ஞானபுரம், கடையனோடை, மூக்குப்பீறி, நாசரேத் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை நாசரேத் ஏஜி சபையின் தலைமை போதகா் எட்வின் பிரபாகா் தலைமையில் சபை விசுவாசிகள் செய்திருந்தனா்.