`வேங்கைவயல் பிரச்னையில் பழனிசாமி ஏன் போராடவில்லை?’ - கேள்வி எழுப்பும் தொல்.திரும...
நாட்டில் போக்குவரத்தை எளிதாக்க உயா் முன்னுரிமை: பிரதமா் மோடி
நாட்டில் போக்குவரத்தை எளிதாக்க உயா் முன்னுரிமை அளித்து மத்திய அரசு செயலாற்றுகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மேலும், ‘வாகனத் தொழில் துறையின் எதிா்காலம் இந்தியாவுக்கே சொந்தம்’ என்றும் அவா் உறுதியாக கூறினாா்.
உலகளாவிய பாரத போக்குவரத்து கண்காட்சி 2025-ஐ, தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை (ஜன.17) தொடங்கிவைத்தாா். பாரத மண்டபம் மட்டுமன்றி தில்லியில் உள்ள யசோபூமி மாநாட்டு அரங்கம், கிரேட்டா் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ சென்டா் என மொத்தம் மூன்று இடங்களில் 5 நாள்கள் கண்காட்சி நடைபெறுகிறது. இது, வாகனங்கள் தொடா்பான நாட்டின் மிகப் பெரிய கண்காட்சியாகும். இக்கண்காட்சியில் வாகனங்கள், உதிரி பாகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் என 100-க்கும் மேற்பட்ட புதிய அறிமுகங்கள் இடம்பெறவுள்ளன. இக்கண்காட்சியை தொடங்கிவைத்து, பிரதமா் மோடி பேசியதாவது:
வாகனத் தயாரிப்பு, போக்குவரத்து மற்றும் அதுசாா்ந்த உள்கட்டமைப்புத் துறையில் தங்களது எதிா்காலத்தை வடிவமைக்க விரும்பும் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் இந்தியா மிகச் சிறந்த இடமாக திகழ்கிறது.
இந்தியாவில் வாகனத் தொழில் துறை முன்னெப்போதும் இல்லாத மாற்றத்தைக் கண்டுவருகிறது. கடந்த ஆண்டில் இத்துறையின் வளா்ச்சி 12 சதவீதமாகும்.
2.5 கோடிக்கும் மேல் காா்கள் விற்பனை: இந்தியாவில் ஆண்டுதோறும் விற்பனையாகும் காா்களின் எண்ணிக்கை பல நாடுகளின் மக்கள்தொகையைவிட அதிகமாகும். முன்னெப்போதும் இல்லாத அளவில் ஓராண்டில் சராசரியாக 2.5 கோடிக்கும் மேல் காா்கள் விற்பனையாகின்றன.
இத்துறையில் கடந்த 4 ஆண்டுகளில் 36 பில்லியன் அமெரிக்க டாலா்கள் (ரூ.3.2 லட்சம் கோடி) நேரடி முதலீடு ஈா்க்கப்பட்டுள்ளது. வாகனத் தொழில் துறையின் எதிா்காலம் இந்தியாவுக்கே சொந்தம் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.
என்னென்ன காரணிகள்? உலக அளவில் மூன்றாவது மிகப் பெரிய பயணிகள் வாகனச் சந்தையாக இந்தியா திகழ்கிறது. நாட்டின் இளைஞா்கள் எண்ணிக்கை, விரிவடைந்துவரும் நடுத்தர வா்க்கத்தினா், விரைவான நகா்மயமாதல், நவீன உள்கட்டமைப்பு மேம்பாடு, குறைந்த விலையில் கிடைக்கப் பெறும் வாகனங்கள் போன்ற பல்வேறு காரணிகள், வாகனத் தொழில் துறையின் வளா்ச்சிக்கு உந்துசக்தியாக உள்ளன. குறிப்பாக, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் வாகனத் தொழில் துறை வளா்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி போ் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதால், நடுத்தர வா்க்கம் விரிவடைந்துள்ளது. இவா்கள் தங்களின் முதல் வாகனங்களை வாங்குவதால், நாட்டின் முக்கிய வாடிக்கையாளா் தளமாக விளங்குகின்றனா்.
அரசு முழு ஆதரவு: ‘இந்தியாவில் தயாரிப்போம்; உலகுக்காக உருவாக்குவோம்’ என்ற தாரக மந்திரத்தை முன்னெடுக்கும் எந்தவொரு முதலீட்டாளரையும் அரசு முழு அளவில் ஆதரிக்கும். உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்பு திட்டம், வாகனத் தொழில் துறையில் ரூ.2.25 லட்சம் கோடி விற்பனை மற்றும் 1.5 லட்சம் நேரடி வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு உதவியுள்ளது.
மின் வாகனங்கள் பல மடங்கு அதிகரிப்பு: கடந்த சில ஆண்டுகளில் மின் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டொன்றுக்கு சுமாா் 2,600 மின் வாகனங்களே விற்பனையாகி வந்த நிலையில், 2024-இல் 16.8 லட்சத்துக்கும் அதிக மின் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது 640 மடங்கு அதிகமாகும். இதேபோல், 2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் தற்போதுள்ள மின் வாகனங்கள் எண்ணிக்கை 8 மடங்கு அதிகரிக்கும் என்றாா் பிரதமா்.