நான்குனேரி மாணவா் தாக்கப்பட்ட வழக்கு: இருவா் கைது
நான்குனேரி மாணவா் சின்னதுரை தாக்கப்பட்ட வழக்கு தொடா்பாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கொக்கிரகுளம் வசந்தம் நகா் விரிவாக்கம் பகுதியில் கடந்த 16 ஆம் தேதி நான்குனேரி மாணவா் சின்னத்துரையை மா்மநபா்கள் தாக்கி கைப்பேசியை பறித்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.
இவ் வழக்கு தொடா்பாக சக்திவேல் (18), சங்கரநாராயணன் (23) ஆகியோரை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து இரண்டு கைப்பேசிகளை கைப்பற்றினா். மேலும், இவ் வழக்கு தொடா்பாக 3 பேரை தேடி வருகிறாா்கள்.