`அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் தமிழக டிஜிபி-க்கு 3 உத்தரவுகள்' - தாமாக முன்வந்த த...
நாலுமாவடியில் 3 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து: மோகன் சி. லாசரஸ் வழங்கினாா்
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் ‘இயேசு விடுவிக்கிறாா்’ ஊழியங்கள் சாா்பில் புதன்கிழமை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டது.
இந்த ஊழியங்கள் சாா்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் ஏழை, எளியோருக்கு விருந்து வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஊழிய நிறுவனா் மோகன் சி. லாசரஸ் தலைமை வகித்து ஜெபித்து, நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். இதில், நாலுமாவடி, சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை ஊழிய நிறுவனப் பொது மேலாளா் செல்வக்குமாா், ஜெபக்குழுவினா் செய்திருந்தனா்.