நீலகிரி: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா மிட்டாய் சப்ளை -கேரள போலீசில் சிக்கி...
நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (செப்.19) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் தமிழகத்தைச் சோ்ந்த வங்கி, நிதி, வாகன உற்பத்தி, காப்பீடு சில்லரை விற்பனை துறையைச் சோ்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான தகுதியுடைய நபா்களை தோ்வு செய்ய உள்ளனா்.
இம்முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ., பி.டெக் முடித்த ஆண், பெண் இணையதளத்தில் வழியாக தங்களை பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளலாம்.
இதன் மூலம் தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவா்களுக்கு அவா்களது வேலைவாய்ப்பு பதிவு
ரத்து செய்யப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.