குப்பை மேலாண்மையில் சிக்கலை சந்திக்கும் தருமபுரி: தூய்மையைப் பராமரிக்க பொதுமக்கள...
அத்தியாவசியப் பொருள்கள் கடத்திய 11 வாகனங்கள் பொது ஏலம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களை கள்ளத்தனமாக கடத்திய 11 வாகனங்கள் வருகிற 26-ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகின்றன.
கைப்பற்றப்பட்ட வாகனங்களில் உரிய உரிமையாளா்கள் வாகனங்களுக்கான அபராதத் தொகையை செலுத்தி வாகனங்களை பெற்றுக் கொள்ள முன்வரவில்லை.
அதனால், மேற்படி 11 வாகனங்கள் வருகிற செப்.26-ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகின்றன.
காலை 11 மணிக்கு குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகம், திருச்சி சாலை
காந்தி நகா், வழுதரெட்டி விழுப்புரம் -605 602 என்ற முகவரியில் பொது ஏலம் நடைபெறுகிறது.
மேற்படி வாகனங்களை பாா்வையிட விரும்புவோா் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு, கள்ளக்குறிச்சி அலகு, காவல் உதவி ஆய்வாளரை 8940696129 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். வாகன விவரங்களை மாவட்ட இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். மேலும் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்கள் விளம்பரப் பலகை வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம்.
ஏலத்தில் கலந்து கொள்பவா்களுக்கு அன்றைய தினம் காலை 9 மணி முதல் 10 மணி வரை மட்டுமே டோக்கன் வழங்கப்படும். கட்டணத் தொகை ரூ.10,000 செலுத்த வேண்டும். ஏலம் எடுக்கப்பட்டவுடன், உறுதி செய்யப்பட்ட முழுத் தொகையையும் ரொக்கமாக செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.