இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் உயர்ந்து ரூ.86.55 ஆக முடிவு!
நியூஸிலாந்து பிரதமருடன் ராகுல் காந்தி சந்திப்பு!
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸனை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன், பல்வேறு துறை அமைச்சர்களுடன் இந்தியாவுக்கு 5 நாள்கள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தார்.
தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமா் மோடி-கிறிஸ்டோபா் லக்ஸன் இடையே திங்கள்கிழமை விரிவான பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இருதரப்பு உறவுகள் மட்டுமன்றி பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனா்.
இதையும் படிக்க : இந்தியா-நியூஸிலாந்து இடையே 6 ஒப்பந்தங்கள்: இரு பிரதமா்கள் முன்னிலையில் கையொப்பம்
இந்த நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை காலை நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸனை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்த ராகுல் காந்தி அவருடன் கலந்துரையாடினார்.
அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த ராகுல் காந்தி, “உலகளாவிய சவால்கள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதம் நடத்தினோம்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தையின்போது, இருதரப்பு பாதுகாப்பு ரீதியிலான உறவை அமைப்புரீதியில் வலுப்படுத்த வழிவகை செய்யும் ஒப்பந்தம் கையொப்பமானது. மேலும், கல்வி, விளையாட்டு, வேளாண்மை, பருவநிலை மாறுபாடு, சுங்க வரி தொடா்பாக மேலும் 5 ஒப்பந்தங்கள் கையொப்பமாகியது குறிப்பிடத்தக்கது.