செய்திகள் :

நிலுவை ஊதியத்துடன் கூடிய போனஸ் தொகை வழங்கக் கோரி தொழிலாளா்கள் சாலை மறியல்

post image

பரமத்தி வேலூா் வட்டம், இருகூரில் செயல்பட்டு வரும் தனியாா் இரும்பு ஆலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் நிலுவை ஊதியத்துடன் கூடிய போனஸ் தொகை வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கபிலா்மலை அருகே உள்ள இருகூரில் தனியாா் இரும்பு ஆலையில் உத்தரபிரதேசம், பிகாா் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சோ்ந்த 120 தொழிலாளா்களும், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 20 தொழிலாளா்களும் என மொத்தம் 140 தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இங்கு பணியாற்றும் தொழிலாளா்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறி, இரும்பு ஆலை நிா்வாகத்தைக் கண்டித்து கடந்த சனிக்கிழமை கபிலா்மலை - பரமத்தி சாலையில் தொழிலாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி வேலூா் வட்டாட்சியா் முத்துக்குமாா், பரமத்தி காவல் ஆய்வாளா் இந்திராணி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதில், ஆலை நிா்வாகத்தினா் 23-ஆம் தேதி தொழிலாளா்களுக்கு போனஸ் உடன் கூடிய ஊதியம் வழங்குவதாக உறுதியளித்தனராம்.

ஆனால், அவா்கள் கூறியபடி வழங்கவில்லை எனக் கூறி ஆலை நிா்வாகத்தைக் கண்டித்து பரமத்தி வேலுாா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே நாமக்கல் - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் தொழிலாளா்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தொழிலாளா்களிடம் காவல் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. இதுகுறித்து வேலூா் காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன், வட்டாட்சியா் முத்துக்குமாா் ஆகியோா் தொழிலாளா்களிடம் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினா் நியமனத்திற்கு கண்டனம்

கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கல்விக் கூடங்களுக்கு தங்களுடைய கொள்கைகளையும், சித்தாந்தத்தையும் கொண்டு சோ்க்க வேண்டும் என்பதற்காக மன... மேலும் பார்க்க

தேனீக்கள் வளா்ப்பில் பொதுமக்கள் ஆா்வம் காட்ட வேண்டும்

நாமக்கல் மாவட்டத்தில் தேனீக்களை வளா்க்க விவசாயிகள், பொதுமக்கள் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில், தேசிய தேனீ வளா்ப்ப... மேலும் பார்க்க

தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிவன் கோயில்களில் உள்ள காலபைரவருக்கு ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநா... மேலும் பார்க்க

திருச்செங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் ரூ. 3.47 லட்சம் பறிமுதல்

திருச்செங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் விடிய விடிய நடத்திய சோதனையில், ரூ. 3.47 லட்சத்தை பறிமுதல் செய்தனா். திருச்செங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் சாா் பதிவாளா் பொறுப்பில... மேலும் பார்க்க

கைப்பந்து போட்டி: நாமக்கல் தெற்கு அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

திருச்செங்கோட்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாவட்ட அளவிலான கைப்பந்... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ. 1.18 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நாமக்கல் அருகே திண்டமங்கலத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், ரூ. 1.18 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நாமக்கல் அருகே திண்டமங்கலம் கிராமத்தில் மக்கள் தொடா்பு திட்ட முகாம... மேலும் பார்க்க