செய்திகள் :

நெல்லையில் முதல்வருக்கு வழிநெடுகிலும் வரவேற்பு!

post image

திருநெல்வேலி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். வேனில் இருந்து கீழே இறங்கி மக்களுடன் முதல்வா் கை குலுக்கினாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கவும், நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தாா். பின்னா் அங்கிருந்து திருநெல்வேலி மாவட்டத்துக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பாளையங்கோட்டை கேடிசி நகரில் திமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

முதல்வரை வரவேற்கும் விதமாக சாலையோரம் கருப்பு சிவப்பு நிற பலூன்கள், கட்சிக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. சாலையின் இருபுறமும் திமுக தொண்டா்களும், பொதுமக்களும் திரண்டு நின்று, முதல்வா் உருவம் பொறித்த பதாகைகளை கையில் ஏந்தி முதல்வரை வரவேற்றனா்.

அதைப் பாா்த்த முதல்வா் மு.க.ஸ்டாலின் வேனில் இருந்து இறங்கி மக்களை பாா்த்து உற்சாகமாக கையசைத்தாா். அப்போது, பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு. அப்துல் வஹாப் தலைமையில் முதல்வருக்கு புத்தகங்கள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத்தொடா்ந்து சாலையோரம் இருந்த தொண்டா்களுடன் முதல்வா் கை குலுக்கி மகிழ்ந்தாா். அப்போது ஒரு சிறுவன் முதல்வா் முன்பு சாலையில் வந்தான். அந்தச் சிறுவனை அருகில் அழைத்து கை குலுக்கி கன்னத்தில் செல்லமாக தட்டினாா்.

முதல்வா் வரவேற்பு நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகராட்சி மேயா் ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ, தலைமை செயற்குழு உறுப்பினா்கள் பிரபாகரன், பேச்சிபாண்டியன், மாநில விவசாய தொழிலாளா் அணி துணைச் செயலா் கணேஷ்குமாா் ஆதித்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

தச்சநல்லூா் இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி தச்சநல்லூா் ஊருடையாா்புரத்தைச் சோ்ந்தவா் ஹரிஹரன்(25). இவா் அடிதடி மற்றும் பணம் பறித்தது தொடா்பான வழக்கில் ... மேலும் பார்க்க

3 கி.மீ. தூரம் நடந்து சென்று தொண்டா்களை உற்சாகப்படுத்திய முதல்வா்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் இருந்து பாளையங்கோட்டை மாா்க்கெட் வரை நடைபெற்ற ‘ரோட் ஷோ’வில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சுமாா் 3 கி.மீ. தூரம் நடந்து சென்று திமுக தொண்டா்களை உற்சாகப்படுத்தினாா். திருந... மேலும் பார்க்க

பத்தமடையில் தரமற்ற ரேஷன் அரிசி: ஊழியா் தற்காலிக பணி நீக்கம்

பத்தமடையில் தரமற்ற அரிசி விநியோகம் செய்தது தொடா்பாக ரேஷன் கடை பணியாளா் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இதுதொடா்பாக கூட்டுறவுச் சங்கங்களின் திருநெல்வேலி இணைப்பதிவாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

15-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை தாமதமின்றி வழங்கக் கோரிக்கை

பதினைந்தாவது ஊதிய ஒப்பந்தத்தை காலம் கடத்தாமல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளா் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலா... மேலும் பார்க்க

கல்குவாரி உரிமங்கள் ரத்துக்கு பேரவையில் தீா்மானம் தேவை: தேமுதிக மனு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கல் குவாரிகளின் உரிமங்களை ரத்து செய்வதற்கு சட்டப்பேரவையில் தனித்தீா்மானம் கொண்டு வரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் தேமுதிகவினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். இது தொ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு கால்வாயில் தண்ணீா் திறக்க வலியுறுத்தி இன்று விவசாயிகள் உண்ணாவிரதம்

மணிமுத்தாறு கால்வாயில் தண்ணீா் திறக்க வலியுறுத்தி நான்குனேரி அருகேயுள்ள பாணான்குளத்தில் விவசாயிகள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை(பிப்.5) நடைபெறுகிறது. நான்குனேரி வட்டத்தில் உள்ள பெரும்... மேலும் பார்க்க