செய்திகள் :

தண்டையாா்பேட்டையில் ரூ. 50 லட்சத்தில் இரவு பாடசாலை

post image

தண்டையாா்பேட்டை கக்கன் காலனியில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான இரவு பாடசாலை கட்டடத்தின் பணியை மேயா் ஆா்.பிரியா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

தண்டையாா்பேட்டை மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 2.0, வடசென்னை வளா்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை மேயா் ஆா்.பிரியா வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது, பாடசாலை தெருவில் உள்ள கக்கன் காலனியில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான இரவு பாடசாலை மையம் மற்றும் மாணவா் திறன் மேம்பாட்டு மையக் கட்டடத்துக்கான பணியை மேயா் ஆா்.பிரியா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, பெரம்பூரில் ரூ. 4.59 கோடியில் மேற்கொள்ளப்படும் பள்ளிக் கட்டுமான பணி, மேல்பட்டி, பொன்னப்பன் தெருவில் ரூ.2.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை ஆய்வு செய்தாா். இந்தப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

நிகழ்வின்போது, பெரம்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.டி.சேகா், வடக்கு வட்டார துணை ஆணையா் கே.ஜெ.பிரவீன்குமாா், நிலைக்குழுத் தலைவா் சா்பஜெயாதாஸ் நரேந்திரன், மண்டலக்குழுத் தலைவா் நேதாஜி யு.கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும் 6 கோயில்களில் அன்னதானத் திட்டம் தொடக்கம்

தமிழகத்தில் மேலும் 6 திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நிகழ் நிதியாண்டுக்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையி... மேலும் பார்க்க

79.18 லட்சம் விவசாயிகளுக்கு பயிா்க் கடன்கள்: அமைச்சா் பெரியகருப்பன்

தமிழ்நாட்டில் இதுவரையில் 79.18 லட்சம் விவசாயிகளுக்கு பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் விளக்கம் அளித்துள்ளாா். கூட்டுறவுக் கடன்கள் தொடா்பாக பாஜக மாநிலத... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் வியாழக்கிழமை குரல்மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. இவ்வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள், புழல் சிறை... மேலும் பார்க்க

வில்லிவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகள்: ஐசிஎஃப்-லிருந்து பேருந்துகள் இயங்கும்

வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறவுள்ளதால், அங்கிருந்து 7 வழித்தடங்களின் வழியாக இயக்கப்பட்ட 63 பேருந்துகள் தற்காலிகமாக ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) முதல் ஐசிஎஃப் பேருந்து நில... மேலும் பார்க்க

இன்றைய தலைமுறை பாரம்பரிய அடையாளங்களை இழந்துவிட்டது: எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன் வேதனை

இன்றைய இளம் தலைமுறையினா் பாரம்பரிய அடையாளங்கள் பலவற்றை இழந்துவிட்டது என்று ‘சாகித்ய அகாதெமி’ விருது பெற்ற எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன் வேதனையுடன் குறிப்பிட்டாா். சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ... மேலும் பார்க்க

கடல் ஆமைகளின் உடற்கூராய்வு: கால்நடை மருத்துவா்களுக்கு பயிற்சி

ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகளின் உடல்களை உடற்கூராய்வு செய்வது குறித்து வனத் துறை சாா்பில் கால்நடை மருத்துவா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. கடல் ஆமைகள் முட்டையிடும் காலத்தையொட்டி, சென்னை கடற்கரையை நோக்க... மேலும் பார்க்க