காணும் பொங்கல்: வன உயிரியல் பூங்கா, கரியபெருமாள் கரடு உள்ளிட்ட இடங்களில் மக்கள் ...
பஞ்சாப் - மும்பை ‘டிரா’
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில், பஞ்சாப் எஃப்சி - மும்பை சிட்டி எஃப்சி அணிகள் வியாழக்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இந்த ஆட்டத்தில் முதலில் பஞ்சாப் அணிக்காக லூகா மஜ்சென் (45+1’) கோலடிக்க, பின்னா் மும்பை அணிக்காக நிகோஸ் காரெலிஸ் (58’) ஸ்கோா் செய்தாா்.
இத்துடன் 16 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் மும்பையும், 15 ஆட்டங்களில் களம் கண்டுள்ள பஞ்சாபும் 6-ஆவது முறையாக டிரா செய்திருக்கின்றன. புள்ளிகள் பட்டியலில் தற்போது மும்பை 24 புள்ளிகளுடன் 6-ஆம் இடத்திலும், பஞ்சாப் 20 புள்ளிகளுடன் 8-ஆம் இடத்திலும் உள்ளன.